---
title: "எத்திரியம் செயலிகள்"
metaTitle: "எத்திரியம் செயலிகள் | எத்திரியத்தில் பரவலாக்கப்பட்ட செயலிகள் (dapp)"
description: "எத்திரியத்தில் உள்ள செயலிகள் இலவசமானவை, உலகளாவியவை மற்றும் தனியார் நிறுவன சேவையகங்களுக்குப் பதிலாக பொது தொகுதிச்சங்கிலியைப் பயன்படுத்துகின்றன. இதன் பொருள் நீங்கள் ஒவ்வொரு திட்டத்திலும் ஒரே கணக்கைப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் தனியுரிமையைப் பராமரிக்கலாம்."
lang: ta
template: use-cases
emoji: ":handshake:"
sidebarDepth: 2
showDropdown: false
image: /images/doge-computer.png
summary: "எத்திரியத்தில் உள்ள செயலிகள் இலவசமானவை, உலகளாவியவை மற்றும் தனியார் நிறுவன சேவையகங்களுக்குப் பதிலாக பொது தொகுதிச்சங்கிலியைப் பயன்படுத்துகின்றன. இதன் பொருள் நீங்கள் ஒவ்வொரு திட்டத்திலும் ஒரே கணக்கைப் பயன்படுத்தலாம் மற்றும் உங்கள் தனியுரிமையைப் பராமரிக்கலாம்."
---

## சிறப்புத் திறன்களைக் கொண்ட செயலிகள் {#apps-with-superpowers}

எத்திரியம் செயலிகள் வழக்கமான செயலிகளைப் போலவே தோன்றலாம். ஆனால் திரைக்குப் பின்னால் அவை சில சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளன.

ஒரு செயலி எத்திரியம் தொகுதிச்சங்கிலியில் வெளியிடப்பட்டவுடன், அதை நிறுத்த முடியாது. ஏனெனில் எத்திரியம் பிணையம் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான கணினிகளில் பரவலாக்கப்பட்டுள்ளது. எத்திரியத்தில் இயங்கும் செயலிகளை யாராலும் முடக்க முடியாது, ஏனெனில் குறிவைக்க ஒரே ஒரு சேவையகம் இல்லை. எத்திரியம் நடுநிலையானது, எனவே உலகில் எங்கும் உள்ள எவரும் இதைப் பயன்படுத்தலாம் அல்லது அதனுடன் இணைந்து அதன் மேல் தங்கள் மாற்றங்களை உருவாக்கலாம்.

## dapp என்றால் என்ன? {#what-is-a-dapp}

எத்திரியம் செயலிகள் மையப்படுத்தப்பட்ட சேவையகங்களுக்குப் பதிலாக எத்திரியம் தொகுதிச்சங்கிலியில் இயங்கும் தர்க்கத்தைக் கொண்டுள்ளன. இதனால்தான் அவை பெரும்பாலும் பரவலாக்கப்பட்ட செயலிகள் (dapp) என்று அழைக்கப்படுகின்றன.

<Grid>
  <Card title="அதிக தனியுரிமை" emoji=":detective:" description="எந்தவொரு dapp-ஐயும் பயன்படுத்த உங்களுக்கு ஒரு எத்திரியம் பணப்பை மட்டுமே தேவை. உங்கள் தனிப்பட்ட தரவுகள் தேவையில்லை. இணையம் எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்."/>
  <Card title="உலகளவில் அணுகக்கூடியது" emoji="🌍" description="Dapp-கள் பிராந்தியங்கள் மற்றும் ஆப் ஸ்டோர்களின் விதிகளால் நிர்வகிக்கப்படுவதில்லை. உங்கள் அணுகல் இணைய இணைப்பு இருப்பதைப் பொறுத்தது - நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அல்ல." />
  <Card title="மலிவான சேவைகள்" emoji=":handshake:" description="Dapp-கள் பியர்-டு-பியர் (peer-to-peer) முறையிலானவை. இடைத்தரகர்கள் கமிஷன் எடுக்காததால் சேவைகள் மலிவானவை." />
</Grid>

## இது ஏன் முக்கியமானது {#why-does-this-matter}

பாரம்பரிய செயலிகளால் செய்ய முடியாத விஷயங்களை எத்திரியம் செயலிகள் செய்ய முடியும். முற்றிலும் அறிமுகமில்லாத ஒருவருக்கு வட்டியுடன் உங்கள் பணத்தை திரும்பப் பெறுவீர்கள் என்ற உத்தரவாதத்துடன் கடன் கொடுப்பது போல. பரிவர்த்தனையைக் கையாள ஒரு வழக்கறிஞர் போன்ற "நம்பகமான" இடைத்தரகருக்கு பணம் செலுத்தாமல்.

விளையாட்டு, நிதி, வேலை, செய்தியிடல், சேமிப்பகம் மற்றும் பலவற்றிற்கான செயலிகள் உள்ளன. பெரும்பாலான செயலிகளில் நீங்கள் விளம்பரங்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அணுகலால் வரம்பிடப்படுவதில்லை.

எந்தவொரு எத்திரியம் செயலியையும் பயன்படுத்தத் தொடங்க உங்களுக்குத் தேவையானது ஒரு எத்திரியம் பணப்பை மற்றும் சிறிது ETH மட்டுமே.

## இது எவ்வாறு செயல்படுகிறது {#how-does-it-work}

செயலிகள் திறன் ஒப்பந்தங்களால் இயக்கப்படுகின்றன — இவை எத்திரியம் தொகுதிச்சங்கிலியில் இருக்கும் குறியீட்டுத் துண்டுகள். பாரம்பரிய செயலிகளைப் போலல்லாமல், அவற்றை இயக்க ஒரு நிறுவனம் தேவையில்லை.

| அம்சம் | பாரம்பரிய செயலிகள் | எத்திரியம் செயலிகள் |
| ------- | ---------------- | ------------- |
| **யார் கட்டுப்படுத்துகிறார்கள்?** | ஒரு நிறுவனம் | யாரும் இல்லை |
| **எதில் இயங்குகிறது** | தனியார் நிறுவன சேவையகங்கள் | பொது எத்திரியம் தொகுதிச்சங்கிலி |
| **தணிக்கை செய்ய முடியுமா?** | ஆம் | இல்லை |
| **உங்கள் தரவு யாருக்குச் சொந்தமானது?** | பொதுவாக உங்களுக்கு இல்லை | உங்கள் தரவு உங்களுக்கே சொந்தம் |

<WhatAreAppsStories />

<div className="w-full md:w-1/2 mx-auto md:mx-0">

![Illustration of Ethereum developer block building](./developers-eth-blocks.png)

</div>

## எத்திரியம் செயலிகள் லெகோஸ் (legos) போன்றவை {#ethereum-apps-are-like-legos}

செயலிகள் அனைத்தும் எத்திரியத்தில் கட்டமைக்கப்படும்போது, அவை அனைத்தும் இணக்கமானவை. ஒரு செயலிக்கான வில்லை, முற்றிலும் வேறுபட்ட ஒன்றிலும் வேலை செய்யும். இது உங்கள் ஃபேஸ்புக் சுவரில் ட்வீட்களை வெளியிட முடிவது போன்றது. உண்மையில், எல்லா இடங்களிலும் தனித்தனியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமின்றி, பல வேறுபட்ட எத்திரியம் செயலிகளில் ஒரே சுயவிவரத்தை நீங்கள் அடிக்கடி மீண்டும் பயன்படுத்தலாம்.

<BrowseApps />

## மேலும் படிக்க {#further-reading}

- [ஆரம்பநிலையாளர்களுக்கான எத்திரியம்](/what-is-ethereum)
- [திறன் ஒப்பந்தம் என்றால் என்ன?](/developers/docs/smart-contracts/)
- [தொழில்நுட்ப dapp ஆவணங்கள்](/developers/docs/dapps/)

## அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் {#faq}

<ExpandableCard title="dapp என்பதன் விரிவாக்கம் என்ன?" visible>
  <p>Dapp என்பது பரவலாக்கப்பட்ட செயலிகளைக் குறிக்கிறது. அவை எத்திரியம் போன்ற தொகுதிச்சங்கிலி பிணையங்களில் கட்டமைக்கப்பட்ட செயலிகளாகும். அடிப்படை பிணையம் பரவலாக்கப்பட்டிருப்பதால் அவை பரவலாக்கப்பட்டவை என்று அழைக்கப்படுகின்றன.</p>
</ExpandableCard>

<ExpandableCard title="நான் ஒரு dapp-இல் நாணயங்களை வாங்கலாமா?" visible>
  <p>சில செயலிகள் கிரிப்டோ வில்லைகளை வர்த்தகம் செய்ய அல்லது வாங்க உங்களை அனுமதிக்கின்றன, ஆனால் எல்லா செயலிகளும் அதற்கானவை அல்ல. உங்கள் முதல் வில்லைகளை வாங்க விரும்பினால், [ETH-ஐப் பெறுங்கள்](/get-eth) என்பதைப் பார்வையிடவும்.</p>
</ExpandableCard>

<ExpandableCard title="சிறந்த கிரிப்டோ பணப்பை எது?" visible>
  <p>கிரிப்டோ பணப்பை உங்கள் வில்லைகளை வைத்திருக்கவும் உங்கள் எத்திரியம் கணக்கை நிர்வகிக்கவும் உங்களை அனுமதிக்கிறது. பல சிறந்த பணப்பைகள் உள்ளன, ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கத்திற்காக சேவை செய்கின்றன. உங்களுக்கு எந்தப் பணப்பை சிறந்தது என்பதைக் கண்டறிய, எங்கள் [பணப்பைகளின் பட்டியலைப்](/wallets/find-wallet) பார்வையிடவும்.</p>
</ExpandableCard>

<Divider />

<QuizWidget quizKey="what-are-apps" />
