
எத்தேரியமுக்கு வரவேற்கிறோம்
எத்தேரியம் என்பது சமூகத்தால் இயக்கப்படும் தொழில்நுட்பமாகும். அதில் கிரிப்டோகரன்சி ஈதர் (ETH) மற்றும் பன்முனைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான செயலிகள் செயல்படுகின்றன.
தொடங்குக
எத்தேரியம் உலகத்திற்கான உங்களது நுழைவாயில் ethereum.org ஆகும். புதிய தொழில்நுட்பமாகிய இது தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கும். அதனால் ஒரு வழிகாட்டியின் உதவி உங்களுக்கு தேவைப்படும். இதைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்துகொள்ள, இவற்றைச் செய்யுங்கள்.


பணப்பையைத் தேர்வுசெய்க
எத்தேரியம் உடன் இணையவும் உங்கள் பணத்தை நிர்வகிக்கவும் பணப்பை உங்களுக்கு உதவும்.

ETHஐ பெறுக
ETH என்பது எத்தேரியம் நாணயம் ஆகும்- நீங்கள் அதை செயலிகளில் பயன்படுத்தலாம்.

Dappஐப் பயன்படுத்துக
Dapps என்பது எத்தேரியம் மூலம் இயக்கப்படும் செயலிகள் ஆகும். இவற்றின் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.

உருவாக்கத் தொடங்குக
நீங்கள் எத்தேரியம் மூலம் குறியீட்டை உருவாக்க விரும்பினால், எங்கள் உருவாக்குநர்கள் போர்ட்டலில் உள்ள ஆவணங்கள், பயிற்சிகளுடன் மேலும் பலவற்றைப் பாருங்கள்.
எத்தேரியம் என்றால் என்ன?
டிஜிட்டல் பணம், உலகளாவிய கொடுப்பனவுகள் மற்றும் செயலிகளுக்கான தொழில்நுட்பம் எத்தேரியம் ஆகும். வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்துடன், படைப்பாளிகள் ஆன்லைனில் தைரியமாகச் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளையும் இன்னும் பலவற்றையும் இந்தச் சமூகம் உருவாக்கியுள்ளது. நீங்கள் உலகில் எங்கிருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம், இது அனைவரும் அணுகக்கூடியது - இதற்கு இணையம் மட்டுமே இருந்தால் போதும்.
