முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

பக்கம் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை, 2024

டெவலப்பர் கருவிகளைச் சேர்த்தல்

மக்கள் நம்பிக்கையுடன் உருவாக்குவதற்கும் அவர்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதற்கும், சிறந்த டெவலப்பர் ஆதாரங்களை நாங்கள் பட்டியலிடுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம்.

நாங்கள் தவறவிட்ட பயனுள்ள டெவலப்பர் கருவி ஏதேனும் இருந்தால், பொருத்தமான இடத்தில் அதைப் பரிந்துரைக்க தயங்க வேண்டாம்.

நாங்கள் தற்போது எங்கள் டெவலப்பர் போர்ட்டல் முழுவதும் டெவலப்பர் கருவிகளைப் பட்டியலிடுகிறோம்.

பொருத்தமான பக்கங்களில் புதிய சேர்த்தல்களைப் பரிந்துரைக்க தயங்க வேண்டாம்.

நாங்கள் எவ்வாறு முடிவு செய்கிறோம்

டெவலப்பர் கருவி சமர்ப்பிப்புகள் பின்வரும் அளவுகோல்களால் மதிப்பிடப்படும்:

ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள கருவிகளிலிருந்து இது அர்த்தமுள்ள வகையில் வேறுபடுகிறதா?

  • புதிய பிரிவுகள் அல்லது கருவிகளின் வகைகள்
  • தற்போதுள்ள ஒத்த கருவிகளுடன் ஒப்பிடும்போது புதிய அம்சங்கள்
  • தற்போதுள்ள ஒத்த கருவிகளால் உள்ளடக்கப்படாத ஒரு தனித்துவமான பயன்பாட்டு-வழக்கை இலக்காகக் கொண்டது

கருவி நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா?

  • ஆவணங்கள் உள்ளதா?
  • கருவியைப் பயன்படுத்த இது போதுமானதா?
  • இது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதா?

கருவி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறதா?

  • GitHub நட்சத்திரங்கள், பதிவிறக்க புள்ளிவிவரங்கள் மற்றும் அறியப்பட்ட நிறுவனங்கள் அல்லது திட்டங்களால் இது பயன்படுத்தப்படுகிறதா போன்ற அளவீடுகளை நாங்கள் கருத்தில் கொள்வோம்

கருவி போதுமான தரத்தில் உள்ளதா?

  • மீண்டும் மீண்டும் வரும் பிழைகள் உள்ளதா?
  • கருவி நம்பகமானதா?
  • கருவி தீவிரமாகப் பராமரிக்கப்படுகிறதா?

கருவி ஓப்பன் சோர்ஸா?

Ethereum வெளியில் உள்ள பல திட்டங்கள் ஓப்பன் சோர்ஸ் ஆகும். சமூக டெவலப்பர்கள் குறியீட்டை ஆய்வு செய்யவும் அதற்குப் பங்களிக்கவும் அனுமதிக்கும் ஓப்பன் சோர்ஸ் திட்டங்களை நாங்கள் பட்டியலிட அதிக வாய்ப்புள்ளது.


தயாரிப்பு வரிசைப்படுத்தல்

தயாரிப்புகள் அகரவரிசைப்படி போன்ற வேறுவிதமாகக் குறிப்பாக வரிசைப்படுத்தப்படாவிட்டால், தயாரிப்புகள் பக்கத்தில் சேர்க்கப்பட்டதிலிருந்து மிகச் சமீபத்தியது வரை காட்டப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புதிய தயாரிப்புகள் பட்டியலின் கீழே சேர்க்கப்படும்.


உங்கள் டெவலப்பர் கருவியைச் சேர்க்கவும்

நீங்கள் ethereum.org இல் ஒரு டெவலப்பர் கருவியைச் சேர்க்க விரும்பினால், அது அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், GitHub இல் ஒரு சிக்கலை (issue) உருவாக்கவும்.

சிக்கலை உருவாக்கு (opens in a new tab)

பக்கம் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 19 ஜூலை, 2024

இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா?