பிளாக்செயின் பாலங்கள்
Web3 ஆனது L1 பிளாக்செயின்கள் மற்றும் L2 அளவிடுதல் தீர்வுகளின் சூழலமைப்பாக உருவாகியுள்ளது, ஒவ்வொன்றும் தனித்துவமான திறன்கள் மற்றும் சமரசங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. Blockchain நெறிமுறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கையில், chains இடையே சொத்துக்களை நகர்த்துவதற்கான தேவையும் அதிகரிக்கின்றது.இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, நமக்கு பாலங்கள் தேவைப்படுகின்றன.
Bridges என்றால் என்ன?
Blockchain bridges நம்முடைய நிஜ உலகில் உள்ள bridges போலவே செயல்படுகின்றன. எப்படியொரு நிஜ உலக bridge இரண்டு நிஜ இடங்களை இணைக்கின்றதோ, அதேபோல் ஒரு blockchain bridge இரண்டு blockchain சூழல்களை இணைக்கின்றது. Bridges, தகவல் மற்றும் சொத்துக்களின் பரிமாற்றத்தைக் கொண்டு blockchains இடையே தொடர்பு ஏற்படுத்துகின்றன.
ஒரு எடுத்துக்காட்டு பார்க்கலாம்:
நீங்கள் USA யிலிருந்து, Europe யில் சுற்றுலா திட்டமிடுகிறீர்கள். உங்களிடம் USD உள்ளது, ஆனால் நீங்கள் செலவிட EUR தேவைப்படுகிறது. உங்கள் USD ஐ EUR க்கு மாற்ற, ஒரு currency exchange பயன்படுத்தலாம், சிறிய கட்டணத்திற்கு.
ஆனால், நீங்கள் மற்றொரு பயன்படுத்த இதே போன்ற பரிமாற்றத்தைச் செய்ய விரும்பினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் Ethereum Mainnet-இல் உள்ள -ஐ Arbitrumopens in a new tab-இல் உள்ள ETH-க்காகப் பரிமாற்றம் செய்ய விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நாம் EUR க்கான currency exchange செய்ததைப் போலவே, நமக்கு Ethereum இருந்து Arbitrum க்கு நமது ETH ஐ நகர்த்த ஒரு கருவி தேவைப்படுகிறது. Bridges இப்படியொரு பரிவர்த்தனையைச் சாத்தியமாக்குகின்றன. இந்த நிலையில், Arbitrum ஒரு நேட்டிவ் பாலத்தைக் கொண்டுள்ளதுopens in a new tab, அது Mainnet-இல் இருந்து Arbitrum-க்கு ETH-ஐ மாற்றும்.
Bridges எதற்குத் தேவை?
அனைத்து blockchains களுக்கும் தங்கள் வரம்புகள் உள்ளன. Ethereum அளவிடுவதற்கும் தேவைக்கு ஏற்ப இருப்பதற்கும், அதற்கு தேவைப்படுகின்றன. மாற்று தீர்வாக, Solana மற்றும் Avalanche போன்ற L1 கள் அதிக அளவிலான throughput ஐ செயல்படுத்துவதற்காக மாறுபட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் இது decentralization இல் மாற்றம் செய்துள்ளன.
இருப்பினும், அனைத்து பிளாக்செயின்களும் தனிமைப்படுத்தப்பட்ட சூழல்களில் உருவாக்கப்படுகின்றன மற்றும் வெவ்வேறு விதிகள் மற்றும் வழிமுறைகளைக் கொண்டுள்ளன. இதன் பொருள், இவைஇயல்பாகத் தொடர்புு கொள்ள முடியாது, மற்றும் tokens கள் blockchains களுக்கு இடையே சுதந்திரமாக நகர முடியாது.
Bridges கள் blockchains களை இணைக்க இருப்பதால், அவை தகவல்களை மற்றும் tokens களை அதற்குள் பரிமாற்றம் செய்வதை சாத்தியமாக்குகின்றன.
பாலங்கள் செயல்படுத்துபவை:
- சொத்துகள் மற்றும் தகவல்களின் cross-chain transfer ஐ சாத்தியமாக்குகின்றன.
- பல்வேறு பிளாக்செயின்களின் பலங்களை அணுக -களை செயல்படுத்துகிறது – இதனால் அவற்றின் திறன்களை மேம்படுத்துகிறது (நெறிமுறைகளுக்கு இப்போது புதுமைக்கான அதிக வடிவமைப்பு இடம் உள்ளது).
- பயனர்களுக்குப் புதிய தளங்களை அணுக அனுமதிக்கின்றன மற்றும் வெவ்வேறு chains களின் நன்மைகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.
- மாறுபட்ட blockchain சூழல்களின் developers க்கு ஒத்துழைத்து, பயனர்களுக்கான புதிய தளங்களை உருவாக்க அனுமதிக்கின்றன.
டோக்கன்களை லேயர் 2-க்கு பாலம் அமைப்பது எப்படி
பாலத்தின் பயன்பாட்டுச் சூழல்கள்
இணைப்புகள் பயன்படுத்தக்கூடிய சில சூழல்களைப் பார்க்கலாம்:
குறைந்த பரிவர்த்தனைக் கட்டணங்கள்
நீங்கள் Ethereum Mainnet இல் ETH வைத்திருக்கிறீர்கள் எனக் கருதுவோம், ஆனால் நீங்களோ குறைந்த பரிவர்த்தனை கட்டணங்களுடன் பல்வேறு dapps ஐப் பயன்படுத்த விரும்புகிறீர்கள். உங்கள் ETH ஐ Mainnet இல் இருந்து Ethereum L2 rollup க்கு bridge செய்தால், நீங்கள் குறைந்த பரிவர்த்தனை கட்டணங்களை அனுபவிக்கலாம்.
மற்ற பிளாக்செயின்களில் உள்ள Dapps
நீங்கள் Ethereum Mainnet இல் Aave-ஐப் பயன்படுத்தி USDT-ஐ வழங்குகிறீர்கள், ஆனால் Polygon-இல் Aave-ஐப் பயன்படுத்தி USDT-ஐ வழங்குவதற்கு நீங்கள் பெறக்கூடிய வட்டி விகிதம் அதிகமாக இருந்தால்.
பிளாக்செயின் சூழலமைப்புகளை ஆராயுங்கள்
நீங்கள் Ethereum Mainnet இல் ETH வைத்திருப்பதாகக் கருதுவோம், ஆனால் நீங்கள் ஒரு மாற்று L1 ஐ ஆராய்ந்து, அவற்றின் native dapps ஐப் பயன்படுத்த விரும்புகிறீர்கள். இதற்காக Mainnet இல் உள்ள உங்கள் ETH ஐ alt L1 க்கு மாற்ற bridge பயன்படுத்தலாம்.
நேட்டிவ் கிரிப்டோ சொத்துக்களை சொந்தமாக்குங்கள்
நீங்கள் native Bitcoin (BTC) ஐ வைத்திருக்க விரும்புகிறீர்கள் எனக் கருதுவோம், ஆனால் உங்கள் நிதிகள் அனைத்தும் Ethereum Mainnet இல் உள்ளன. Ethereum இல் BTC ன் பரப்பு WBTC ஐ வாங்கலாம். இருப்பினும், WBTC என்பது Ethereum நெட்வொர்க்கிற்கு நேட்டிவ் ஆன ஒரு டோக்கன் ஆகும், அதாவது இது Bitcoin-இன் Ethereum பதிப்பாகும், Bitcoin பிளாக்செயினில் உள்ள அசல் சொத்து அல்ல. Native BTC ஐப் பெற, உங்கள் சொத்துகளை Ethereum இல் இருந்து Bitcoin க்கு bridge செய்ய வேண்டும். இது உங்கள் WBTC ஐ native BTC ஆக மாற்றும். மாற்றாக, நீங்கள் BTC-ஐ சொந்தமாக வைத்திருக்கலாம் மற்றும் அதை Ethereum நெறிமுறைகளில் பயன்படுத்த விரும்பலாம். இதற்காக, BTC இருந்து WBTC க்கு bridge செய்ய வேண்டும், இது பிறகு Ethereum இல் சொத்தாகப் பயன்படுத்தலாம்.
பாலங்களின் வகைகள்
பாலங்கள் பல வகையான வடிவமைப்புகளையும் நுணுக்கங்களையும் கொண்டுள்ளன. பொதுவாக, பாலங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: நம்பகமான பாலங்கள் மற்றும் நம்பகமற்ற பாலங்கள்.
| நம்பகமான பாலங்கள் | நம்பகமற்ற பாலங்கள் |
|---|---|
| நம்பகமான பாலங்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு ஒரு மைய நிறுவனம் அல்லது அமைப்பைச் சார்ந்துள்ளன. | நம்பகமற்ற பாலங்கள் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பயன்படுத்தி செயல்படுகின்றன. |
| நிதிகளின் பொறுப்பு மற்றும் பாலத்தின் பாதுகாப்பு தொடர்பாக அவற்றுக்கு நம்பிக்கை அனுமானங்கள் உள்ளன. பயனர்கள் பெரும்பாலும் பால இயக்குனரின் நற்பெயரைச் சார்ந்துள்ளனர். | அவை நம்பகமற்றவை, அதாவது, பாலத்தின் பாதுகாப்பு அடிப்படையிலான பிளாக்செயினின் பாதுகாப்பைப் போன்றது. |
| பயனர்கள் தங்கள் கிரிப்டோ சொத்துக்களின் மீதான கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டும். | மூலம், நம்பகமற்ற பாலங்கள் பயனர்கள் தங்கள் நிதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன. |
நாம் எளிமையாகக் கூறினால், trusted bridges க்கு trust assumptions உள்ளது, ஆனால் trustless bridges க்கு trust-minimized ஆக இருக்கும் மற்றும் அடிப்படை domains களின் அப்புறம் புதிய trust assumptions ஐ உருவாக்காது. இந்தச் சொற்களை இவ்வாறு விவரிக்கலாம்:
- நம்பகமற்றது: அடிப்படை களங்களுக்குச் சமமான பாதுகாப்பைக் கொண்டிருத்தல். அர்ஜுன் புப்டானி இந்தக் கட்டுரையில் விவரித்தபடி.opens in a new tab
- நம்பிக்கை அனுமானங்கள்: அமைப்பில் வெளிப்புற சரிபார்ப்பாளர்களைச் சேர்ப்பதன் மூலம் அடிப்படை களங்களின் பாதுகாப்பிலிருந்து விலகிச் செல்வது, இதனால் அது கிரிப்டோ-பொருளாதார ரீதியாக குறைந்த பாதுகாப்பானதாகிறது.
இரண்டு அணுகுமுறைகளின் முக்கிய வேறுபாடுகளைப் பற்றி ஒரு சிறந்த புரிதலை உருவாக்க, ஒரு எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்ளலாம்:
நீங்கள் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ளீர்கள் எனக் கற்பனை செய்க. அங்கே இரண்டு வகையான சோதனைச் சாவடிகள் உள்ளன:
- Manual Checkpoints — அதிகாரிகள் இயக்கும் சாவடிகள், இதில் அதிகாரிகள் உங்கள் டிக்கெட் மற்றும் அடையாளத்தின் அனைத்து விவரங்களையும் கையால் சரிபார்த்து பறக்கும் அனுமதி சீட்டைக் கொடுப்பார்கள்.
- Self Check-In — ஒரு இயந்திரம்மூலம் இயக்கப்படும் சோதனைச் சாவடிகள், இதில் நீங்கள் உங்கள் பறக்கவிருக்கும் விவரங்களைப் போட்டால், சரியாக இருந்தால் பறக்கும் அனுமதி சீட்டைப் பெறலாம்.
Manual checkpoint என்பது trusted model போன்று, இது ஒரு மூன்றாம் தரப்பின் (அதிகாரிகள்) மீது தங்கியுள்ளது. பயனாளராக, நீங்கள்அதிகாரிகளைச் சரியானன முடிவுகளை எடுக்கவும், உங்கள் தனிப்பட்டதகவல்களைச் சரியாகப் பயன்படுத்தவும் நம்புகிறீர்கள்.
Self check-in என்பது trustless model ஐப் போன்று, இது இயக்குநரின் பங்கைக் குறைத்து, தொழில்நுட்பத்தை அதன் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துகிறது. பயனாளர்கள் எப்போதும் தங்கள் தரவின் மேலாண்மையில் இருப்பார்கள் மற்றும் மூன்றாம் தரப்பின் மேல் தங்கள் தனிப்பட்ட தகவல்களை நம்பத் தேவையில்லை.
பல bridging solutions கள் இந்த இரண்டு ஓரங்களுக்கிடையே இருக்கும் மாடல்களைப் பின்பற்றுகின்றன, மற்றும் பல்வேறு அளவுகளில் trustlessness இல் உள்ளன.
பாலங்களைப் பயன்படுத்துங்கள்
பாலங்களைப் பயன்படுத்துவது உங்கள் சொத்துக்களை வெவ்வேறு பிளாக்செயின்களுக்கு இடையில் நகர்த்த உங்களை அனுமதிக்கிறது. பாலங்களைக் கண்டறிந்து பயன்படுத்த உதவும் சில ஆதாரங்கள் இங்கே:
- L2BEAT Bridges Summaryopens in a new tab & L2BEAT Bridges Risk Analysisopens in a new tab: சந்தைப் பங்கு, பாலத்தின் வகை மற்றும் சேருமிடச் சங்கிலிகள் பற்றிய விவரங்கள் உட்பட பல்வேறு பாலங்களின் விரிவான சுருக்கம். L2BEAT பாலங்களுக்கான இடர் பகுப்பாய்வையும் கொண்டுள்ளது, இது ஒரு பாலத்தைத் தேர்ந்தெடுக்கும்போது பயனர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
- DefiLlama Bridge Summaryopens in a new tab: Ethereum நெட்வொர்க்குகளில் உள்ள பாலத்தின் அளவுகளின் சுருக்கம்.
பாலங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இடர்கள்
Bridges இப்போது வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. ஆப்டிமல் bridge design இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்லலாம். எந்த வகை bridge உடனும் தொடர்பு கொள்வது ஒரு risk ஆகும்:
- ஸ்மார்ட் ஒப்பந்த இடர் — குறியீட்டில் உள்ள ஒரு பிழையின் காரணமாக பயனர் நிதிகள் இழக்கப்படும் அபாயம்
- தொழில்நுட்ப இடர் — மென்பொருள் தோல்வி, பிழையான குறியீடு, மனிதப் பிழை, ஸ்பேம் மற்றும் தீங்கிழைக்கும் தாக்குதல்கள் பயனர் செயல்பாடுகளை சீர்குலைக்கக்கூடும்
மேலும், trusted bridges க்கு trust assumptions உள்ளதால், அவை கூடுதல் ஆபத்துகளை உள்ளடக்கியுள்ளன:
- தணிக்கை இடர் — பால இயக்குநர்கள் கோட்பாட்டளவில் பாலத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் சொத்துக்களை மாற்றுவதை நிறுத்த முடியும்
- பாதுகாப்பாளர் இடர் — பால இயக்குநர்கள் பயனர்களின் நிதியைத் திருட கூட்டுச் சதி செய்யலாம்
பயனாளர்களின் நிதி ஆபத்தில் இருக்கக்கூடும்:
- smart contract இல் பிழை இருந்தால்
- பயனாளர் பிழை செய்தால்
- அடிப்படை blockchain ஹேக் செய்யப்பட்டால்
- trusted bridge இல் bridge operators க்கு தீய நோக்கம் இருந்தால்
- பாலம் ஹேக் செய்யப்படுகிறது
சமீபத்திய ஒரு ஹேக் Solana-வின் Wormhole பாலம் ஆகும், அங்கு ஹேக்கின் போது 120k wETH ($325 மில்லியன் அமெரிக்க டாலர்) திருடப்பட்டதுopens in a new tab. பிளாக்செயின்களில் நடந்த பல சிறந்த ஹேக்குகளில் பாலங்கள் சம்பந்தப்பட்டுள்ளனopens in a new tab.
பயனர்களை Ethereum L2-களுக்கு உள்நுழைப்பதற்கும், வெவ்வேறு சூழலமைப்புகளை ஆராய விரும்பும் பயனர்களுக்கும் பாலங்கள் முக்கியமானவை. இருப்பினும், பாலங்களுடன் தொடர்புகொள்வதில் உள்ள இடர்களைக் கருத்தில் கொண்டு, பாலங்கள் செய்யும் சமரசங்களை பயனர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவை குறுக்கு-சங்கிலி பாதுகாப்புக்கான சில உத்திகள்opens in a new tab.
மேலும் வாசிக்க
- EIP-5164: குறுக்கு-சங்கிலி செயலாக்கம்opens in a new tab - ஜூன் 18, 2022 - Brendan Asselstine
- L2பால இடர் கட்டமைப்புopens in a new tab - ஜூலை 5, 2022 - Bartek Kiepuszewski
- "எதிர்காலம் ஏன் பல-சங்கிலியாக இருக்கும், ஆனால் அது குறுக்கு-சங்கிலியாக இருக்காது."opens in a new tab - ஜனவரி 8, 2022 - Vitalik Buterin
- பாதுகாப்பான குறுக்கு-சங்கிலி இயங்குதன்மைக்காக பகிரப்பட்ட பாதுகாப்பைப் பயன்படுத்துதல்: லாக்ராஞ்ச் நிலைக் குழுக்கள் மற்றும் அதற்கு அப்பால்opens in a new tab - ஜூன் 12, 2024 - Emmanuel Awosika
- ரோலப் இயங்குதன்மை தீர்வுகளின் நிலைopens in a new tab - ஜூன் 20, 2024 - Alex Hook
பக்கத்தின் கடைசி புதுப்பிப்பு: 23 பிப்ரவரி, 2026