எத்திரியத்தில் அதிக போக்குவரத்து இருந்தால், அது விலை உயர்ந்ததாக மாறக்கூடும். இதற்கு ஒரு தீர்வு புதிய "அடுக்குகளை" உருவாக்குவதாகும்: அதாவது, எத்திரியத்தைப் போலவே செயல்படும் வெவ்வேறு பிணையங்கள். இந்த அடுக்கு 2 (l2)-கள் குறைந்த கட்டணத்தில் பல பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதன் மூலமும், இவற்றின் முடிவை எப்போதாவது மட்டுமே எத்திரியத்தில் சேமிப்பதன் மூலமும் எத்திரியத்தில் நெரிசல் மற்றும் செலவைக் குறைக்க உதவுகின்றன. எனவே, இந்த அடுக்கு 2 (l2)-கள் அதிகரித்த வேகம் மற்றும் குறைந்த செலவுகளுடன் பரிவர்த்தனை செய்ய நமக்கு உதவுகின்றன. இந்த நன்மைகள் காரணமாக பல பிரபலமான கிரிப்டோ திட்டங்கள் அடுக்கு 2 (l2)-களுக்கு நகர்கின்றன. எத்திரியத்திலிருந்து அடுக்கு 2 (l2)-க்கு டோக்கன்களை மாற்றுவதற்கான எளிமையான வழி ஒரு பாலத்தைப் பயன்படுத்துவதாகும்.
முன்தேவை:
- ஒரு கிரிப்டோ பணப்பையை வைத்திருக்கவும்—உங்களிடம் இல்லையென்றால், எத்திரியம் கணக்கை உருவாக்க இந்த வழிகாட்டியைப் பின்பற்றவும்
- உங்கள் பணப்பையில் நிதியைச் சேர்க்கவும்
1. நீங்கள் எந்த அடுக்கு 2 (l2) பிணையத்தைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கவும்
எங்கள் அடுக்கு 2 (l2) பக்கத்தில் வெவ்வேறு திட்டங்கள் மற்றும் முக்கியமான இணைப்புகளைப் பற்றி நீங்கள் மேலும் அறியலாம்.
2. தேர்ந்தெடுக்கப்பட்ட பாலத்திற்குச் செல்லவும்
சில பிரபலமான அடுக்கு 2 (l2)-கள்:
- ஆர்பிட்ரம் பாலம் (opens in a new tab)
- ஆப்டிமிசம் பாலம் (opens in a new tab)
- Boba பிணையப் பாலம் (opens in a new tab)
3. உங்கள் பணப்பையுடன் பாலத்தை இணைக்கவும்
உங்கள் பணப்பை எத்தேரியம் முதன்மை வலைப்பின்னல் பிணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், பிணையங்களை மாற்றுமாறு வலைத்தளம் தானாகவே உங்களைத் தூண்டும்.
4. தொகையைக் குறிப்பிட்டு நிதியை மாற்றவும்
எதிர்பாராத ஆச்சரியங்களைத் தவிர்க்க, அடுக்கு 2 (l2) பிணையத்தில் நீங்கள் திரும்பப் பெறும் தொகை மற்றும் கட்டணங்களை மதிப்பாய்வு செய்யவும்.
5. உங்கள் பணப்பையில் பரிவர்த்தனையை உறுதிப்படுத்தவும்
பரிவர்த்தனையைச் செயலாக்குவதற்கு ETH வடிவத்தில் ஒரு கட்டணத்தை (அதாவது ) நீங்கள் செலுத்த வேண்டும்.
6. உங்கள் நிதி மாற்றப்படும் வரை காத்திருக்கவும்
இந்தச் செயல்முறைக்கு 10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
7. தேர்ந்தெடுக்கப்பட்ட அடுக்கு 2 (l2) பிணையத்தை உங்கள் பணப்பையில் சேர்க்கவும் (விருப்பத்திற்குரியது)
பிணையத்தின் RPC விவரங்களைக் கண்டறிய நீங்கள் chainlist.org (opens in a new tab) ஐப் பயன்படுத்தலாம். பிணையம் சேர்க்கப்பட்டு பரிவர்த்தனை முடிந்ததும், உங்கள் பணப்பையில் டோக்கன்களைக் காண முடியும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரு பரிமாற்றகத்தில் (exchange) என்னிடம் நிதி இருந்தால் என்ன செய்வது?
ஒரு பரிமாற்றகத்திலிருந்து நேரடியாக சில அடுக்கு 2 (l2)-களுக்கு உங்களால் திரும்பப் பெற முடியும். மேலும் தகவலுக்கு எங்கள் அடுக்கு 2 (l2) பக்கத்தின் “அடுக்கு 2 (l2)-க்கு நகர்த்தவும்” பகுதியைப் பார்க்கவும்.
எனது டோக்கன்களை L2-க்கு பாலம் மூலம் மாற்றிய பிறகு நான் மீண்டும் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னலுக்குச் செல்ல முடியுமா?
ஆம், அதே பாலத்தைப் பயன்படுத்தி நீங்கள் எப்போதும் உங்கள் நிதியை முதன்மை வலைப்பின்னலுக்குத் திரும்ப மாற்றலாம்.
பக்கம் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 6 ஜூன், 2026


