முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
Change page

எத்திரியம் மேம்பாட்டுத் தரநிலைகள்

தரநிலைகளின் மேலோட்டம்

எத்திரியம் சமூகம் பல தரநிலைகளை ஏற்றுக்கொண்டுள்ளது, அவை திட்டங்களை (எத்திரியம் கிளையண்டுகள் மற்றும் பணப்பைகள் போன்றவை) செயலாக்கங்கள் முழுவதும் இயங்குதன்மையுள்ளதாக வைத்திருக்க உதவுகின்றன, மேலும் திறன் ஒப்பந்தங்கள் மற்றும் பரவலாக்கப்பட்ட செயலிகள் (dapps) தொகுக்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்கின்றன.

பொதுவாக தரநிலைகள் எத்திரியம் மேம்பாட்டு முன்மொழிவுகளாக (EIPs) அறிமுகப்படுத்தப்படுகின்றன, அவை சமூக உறுப்பினர்களால் ஒரு நிலையான செயல்முறையின் (புதிய தாவலில் திறக்கப்படும்) மூலம் விவாதிக்கப்படுகின்றன.

தரநிலைகளின் வகைகள்

EIPகளில் 3 வகைகள் உள்ளன:

மேலும், தரநிலைகள் தடம் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

இந்த வெவ்வேறு வகைகள் மற்றும் பிரிவுகள் பற்றிய விரிவான தகவல்களை EIP-1 (புதிய தாவலில் திறக்கப்படும்) இல் காணலாம்

வில்லைத் தரநிலைகள்

  • ERC-20 - வாக்கு வில்லைகள், பங்குவைத்தல் வில்லைகள் அல்லது மெய்நிகர் நாணயங்கள் போன்ற பரிமாற்றக்கூடிய (ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய) வில்லைகளுக்கான நிலையான இடைமுகம்.
    • ERC-223 - வில்லைகளை ஈதரைப் போலவே செயல்பட வைக்கும் மற்றும் பெறுநர்கள் தரப்பில் வில்லைப் பரிமாற்றங்களைக் கையாளுவதை ஆதரிக்கும் ஒரு பரிமாற்றக்கூடிய வில்லைகளின் தரநிலை.
    • ERC-1363 - ஒரே பரிவர்த்தனையில் பெறுநர் ஒப்பந்தங்களில் கால்பேக்கை (callback) செயல்படுத்துவதை ஆதரிக்கும் ERC-20 வில்லைகளுக்கான நீட்டிப்பு இடைமுகம்.
  • ERC-721 - கலைப்படைப்பு அல்லது பாடலுக்கான பத்திரம் போன்ற பரிமாற்ற முடியாத வில்லைகளுக்கான நிலையான இடைமுகம்.
  • ERC-777 - (பரிந்துரைக்கப்படவில்லை) ERC-20 ஐ விட மேம்படுத்தப்பட்ட ஒரு வில்லைத் தரநிலை.
  • ERC-1155 - பரிமாற்றக்கூடிய மற்றும் பரிமாற்ற முடியாத சொத்துக்கள் இரண்டையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு வில்லைத் தரநிலை.
  • ERC-4626 - வருவாய் ஈட்டும் பெட்டகங்களின் தொழில்நுட்ப அளவுருக்களை மேம்படுத்தவும் ஒன்றிணைக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு வில்லைப்படுத்தப்பட்ட பெட்டகத் தரநிலை.

வில்லைத் தரநிலைகள் பற்றி மேலும் அறிக.

மேலும் படிக்க

உங்களுக்கு உதவிய சமூக வளம் பற்றித் தெரியுமா? இந்தப் பக்கத்தைத் திருத்தி அதைச் சேர்க்கவும்!