நிரலாக்க மொழிகள்
எத்திரியத்தில் உருவாக்க டெவலப்பர்கள் ஸ்மார்ட் ஒப்பந்தங்களை எழுத வேண்டும் என்பது ஒரு பொதுவான தவறான கருத்தாகும். இது தவறானது. எத்திரியம் பிணையம் மற்றும் சமூகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, நீங்கள் எந்தவொரு நிரலாக்க மொழியிலும் பங்கேற்க முடியும் என்பதாகும்.
எத்திரியம் மற்றும் அதன் சமூகம் திறந்த மூலத்தை (open source) வரவேற்கின்றன. கிளையண்ட் செயலாக்கங்கள், APIகள், மேம்பாட்டு கட்டமைப்புகள், சோதனை கருவிகள் போன்ற சமூகத் திட்டங்களை நீங்கள் பல்வேறு மொழிகளில் காணலாம்.
உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
திட்டங்கள், வளங்கள் மற்றும் மெய்நிகர் சமூகங்களைக் கண்டறிய உங்களுக்கு விருப்பமான நிரலாக்க மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
- Dart டெவலப்பர்களுக்கான எத்திரியம்
- Delphi டெவலப்பர்களுக்கான எத்திரியம்
- .NET டெவலப்பர்களுக்கான எத்திரியம்
- Elixir டெவலப்பர்களுக்கான எத்திரியம்
- Go டெவலப்பர்களுக்கான எத்திரியம்
- Java டெவலப்பர்களுக்கான எத்திரியம்
- JavaScript டெவலப்பர்களுக்கான எத்திரியம்
- Python டெவலப்பர்களுக்கான எத்திரியம்
- Ruby டெவலப்பர்களுக்கான எத்திரியம்
- Rust டெவலப்பர்களுக்கான எத்திரியம்
எனது மொழி ஆதரிக்கப்படவில்லை என்றால் என்ன செய்வது
கூடுதல் நிரலாக்க மொழிக்கான வளங்களை இணைக்க அல்லது மெய்நிகர் சமூகத்தைச் சுட்டிக்காட்ட நீங்கள் விரும்பினால், ஒரு சிக்கலை உருவாக்குவதன் (opens in a new tab) மூலம் புதிய பக்கத்தைக் கோரலாம்.
தற்போது ஆதரிக்கப்படாத மொழியைப் பயன்படுத்தி தொகுதிச்சங்கிலியுடன் இடைமுகமாகச் செயல்பட நீங்கள் குறியீட்டை எழுத விரும்பினால், எத்திரியம் பிணையத்துடன் இணைக்க ஜேசன்-ஆர்பிசி இடைமுகத்தைப் பயன்படுத்தலாம். TCP/IP ஐப் பயன்படுத்தக்கூடிய எந்தவொரு நிரலாக்க மொழியும் இந்த இடைமுகத்தைப் பயன்படுத்தலாம்.