தரவுக் கட்டமைப்புகள் மற்றும் குறியாக்கம்
எத்திரியம் அதிக அளவிலான தரவை உருவாக்குகிறது, சேமிக்கிறது மற்றும் மாற்றுகிறது. ஒப்பீட்டளவில் சாதாரண நுகர்வோர் தர வன்பொருளில் எவரும் கணுவை இயக்க அனுமதிக்கும் வகையில், இந்தத் தரவு தரப்படுத்தப்பட்ட மற்றும் நினைவக-திறனுள்ள வழிகளில் வடிவமைக்கப்பட வேண்டும். இதை அடைய, எத்திரியம் அடுக்கில் பல குறிப்பிட்ட தரவுக் கட்டமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
முன்நிபந்தனைகள்
நீங்கள் எத்திரியம் மற்றும் கிளையண்ட் மென்பொருளின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நெட்வொர்க்கிங் அடுக்கு மற்றும் எத்திரியம் வெள்ளை அறிக்கை ஆகியவற்றுடன் பரிச்சயம் பரிந்துரைக்கப்படுகிறது.
தரவுக் கட்டமைப்புகள்
பாட்ரிசியா மெர்க்கல் ட்ரைஸ் (Patricia merkle tries)
பாட்ரிசியா மெர்க்கல் ட்ரைஸ் (Patricia Merkle Tries) என்பவை திறவுகோல்-மதிப்பு (key-value) ஜோடிகளை ஒரு உறுதியான மற்றும் கிரிப்டோகிராஃபிக் முறையில் அங்கீகரிக்கப்பட்ட ட்ரையாக குறியாக்கம் செய்யும் கட்டமைப்புகளாகும். இவை எத்திரியத்தின் செயலாக்க அடுக்கு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பாட்ரிசியா மெர்க்கல் ட்ரைஸ் பற்றி மேலும் அறிய
ரிகர்சிவ் லென்த் பிரிஃபிக்ஸ் (Recursive Length Prefix)
ரிகர்சிவ் லென்த் பிரிஃபிக்ஸ் (RLP) என்பது எத்திரியத்தின் செயலாக்க அடுக்கு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வரிசைப்படுத்தல் முறையாகும்.
சிம்பிள் சீரியலைஸ் (Simple Serialize)
சிம்பிள் சீரியலைஸ் (SSZ) என்பது மெர்க்கலைசேஷனுடன் (merklelization) இணக்கமாக இருப்பதால், எத்திரியத்தின் கருத்தொருமிப்பு அடுக்கில் ஆதிக்கம் செலுத்தும் வரிசைப்படுத்தல் வடிவமாகும்.
பக்கம் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 15 ஆகஸ்ட், 2023