முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

கலைச்சொற்களைச் சேர்த்தல்

இந்தத் துறை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கிறது. எத்திரியம் பயனர்களின் அகராதியில் புதிய சொற்கள் தொடர்ந்து நுழைந்து கொண்டே இருக்கின்றன, மேலும் எத்திரியம் தொடர்பான அனைத்திற்கும் துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட குறிப்பை வழங்க உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. தற்போதைய கலைச்சொல் அகராதியைச் சரிபார்க்கவும், நீங்கள் உதவ விரும்பினால் கீழே பார்க்கவும்!

அளவுகோல்கள்

புதிய கலைச்சொற்கள் பின்வரும் அளவுகோல்களின்படி மதிப்பிடப்படும்:

  • சொல்/வரையறை புதுப்பிக்கப்பட்டதா மற்றும் தற்போதைய சூழலுக்குப் பொருத்தமானதா?
  • அகராதியில் ஏற்கனவே இதே போன்ற சொல் உள்ளதா? (அப்படியானால், புதிய சொல்லைச் சேர்ப்பதற்கும் இருக்கும் சொல்லைப் புதுப்பிப்பதற்கும் இடையிலான நன்மைகளைக் கருத்தில் கொள்ளுங்கள்)
  • சொல்/வரையறையில் தயாரிப்பு விளம்பரம் அல்லது பிற விளம்பர உள்ளடக்கம் இல்லாமல் இருக்கிறதா?
  • சொல்/வரையறை எத்திரியம் உடன் நேரடியாகத் தொடர்புடையதா?
  • வரையறையானது புறவயமானதா, துல்லியமானதா மற்றும் அகவயமான தீர்ப்பு அல்லது கருத்து இல்லாமல் இருக்கிறதா?
  • ஆதாரம் நம்பகமானதா? அவர்கள் தங்கள் ஆதாரங்களைக் குறிப்பிடுகிறார்களா?

உங்கள் சொல்லைச் சேர்க்கவும்

நீங்கள் ethereum.org இல் ஒரு கலைச்சொல்லைச் சேர்க்க விரும்பினால், அது அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், GitHub இல் ஒரு சிக்கலை (issue) உருவாக்கவும் (opens in a new tab).