உங்கள் நிதிகளுக்கான அணுகலை நீங்கள் அனுமதித்துள்ள அனைத்து பட்டியலை எவ்வாறு பார்ப்பது மற்றும் அவற்றை எவ்வாறு ரத்து செய்வது என்பதை இந்த வழிகாட்டி உங்களுக்குக் கற்பிக்கும்.
சில நேரங்களில் தீங்கிழைக்கும் உருவாக்குநர்கள் திறன் ஒப்பந்தங்களில் பின்கதவுகளை (backdoors) உருவாக்குகிறார்கள், இது திறன் ஒப்பந்தத்துடன் தொடர்பு கொள்ளும் அறியாத பயனர்களின் நிதிகளுக்கான அணுகலை அனுமதிக்கிறது. பெரும்பாலும் நடப்பது என்னவென்றால், எதிர்காலத்தில் சிறிய அளவிலான சேமிக்கும் முயற்சியில் வரம்பற்ற வில்லைகளைச் செலவிட இத்தகைய தளங்கள் பயனரிடம் அனுமதி கேட்கின்றன, ஆனால் இது அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது.
ஒரு தளம் உங்கள் உள்ள ஒரு வில்லைக்கு வரம்பற்ற அணுகல் உரிமைகளைப் பெற்றவுடன், நீங்கள் அவர்களின் தளத்திலிருந்து உங்கள் பணப்பைக்கு உங்கள் நிதியைத் திரும்பப் பெற்றிருந்தாலும், அவர்கள் அந்த வில்லைகள் அனைத்தையும் செலவிட முடியும். தீங்கிழைக்கும் நபர்கள் உங்கள் நிதியை அணுகி, உங்களுக்கான எந்த மீட்பு விருப்பமும் இல்லாமல் தங்கள் பணப்பைகளுக்கு அவற்றை எடுக்க முடியும்.
சோதிக்கப்படாத புதிய திட்டங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, உங்களுக்குத் தேவையானதை மட்டும் ஒப்புதல் அளிப்பது அல்லது அணுகலைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது மட்டுமே இதற்கான பாதுகாப்புகளாகும். எனவே, அதை நீங்கள் எப்படிச் செய்வது?
படி 1: அணுகலைத் திரும்பப் பெறும் கருவிகளைப் பயன்படுத்தவும்
உங்கள் முகவரியுடன் இணைக்கப்பட்ட திறன் ஒப்பந்தங்களைப் பார்க்கவும் திரும்பப் பெறவும் பல இணையதளங்கள் உங்களை அனுமதிக்கின்றன. இணையதளத்தைப் பார்வையிட்டு உங்கள் பணப்பையை இணைக்கவும்:
- Etherscan (opens in a new tab) (எத்திரியம்)
- Blockscout (opens in a new tab) (எத்திரியம்)
- Revoke (opens in a new tab) (பல பிணையங்கள்)
- Unrekt (opens in a new tab) (பல பிணையங்கள்)
- EverRevoke (opens in a new tab) (பல பிணையங்கள்)
படி 2: உங்கள் பணப்பையை இணைக்கவும்
நீங்கள் இணையதளத்திற்குச் சென்றதும், “Connect wallet” (பணப்பையை இணை) என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் பணப்பையை இணைக்க இணையதளம் உங்களைத் தூண்டும்.
உங்கள் பணப்பையிலும் இணையதளத்திலும் ஒரே பிணையத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிணையம் தொடர்பான திறன் ஒப்பந்தங்களை மட்டுமே நீங்கள் காண்பீர்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் எத்தேரியம் முதன்மை வலைப்பின்னல் உடன் இணைத்தால், எத்திரியம் ஒப்பந்தங்களை மட்டுமே காண்பீர்கள், பாலிகன் போன்ற பிற சங்கிலிகளிலிருந்து வரும் ஒப்பந்தங்களை அல்ல.
படி 3: நீங்கள் திரும்பப் பெற விரும்பும் திறன் ஒப்பந்தத்தைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் வில்லைகளுக்கான அணுகல் அனுமதிக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் அவற்றின் செலவு வரம்பையும் நீங்கள் காண வேண்டும். நீங்கள் நிறுத்த விரும்பும் ஒன்றைக் கண்டறியவும்.
எந்த ஒப்பந்தத்தைத் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் அனைத்தையும் திரும்பப் பெறலாம். இது உங்களுக்கு எந்தப் பிரச்சினையையும் உருவாக்காது, ஆனால் அடுத்த முறை இந்த ஒப்பந்தங்களில் ஏதேனும் ஒன்றுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது புதிய அனுமதிகளை வழங்க வேண்டியிருக்கும்.
படி 4: உங்கள் நிதிகளுக்கான அணுகலைத் திரும்பப் பெறவும்
திரும்பப் பெறு என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்கள் பணப்பையில் புதிய பரிவர்த்தனை பரிந்துரையைக் காண வேண்டும். இது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ரத்துசெய்தல் வெற்றிகரமாக இருக்க நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். பிணையத்தைப் பொறுத்து இது செயலாக்கப்படுவதற்கு ஒரு நிமிடம் முதல் பல நிமிடங்கள் வரை ஆகலாம்.
சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பப் பெறும் கருவியைப் புதுப்பித்து, திரும்பப் பெறப்பட்ட ஒப்பந்தம் பட்டியலிலிருந்து மறைந்துவிட்டதா என்பதை இருமுறை சரிபார்க்க உங்கள் பணப்பையை மீண்டும் இணைக்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
திட்டங்களுக்கு உங்கள் வில்லைகளுக்கான வரம்பற்ற அணுகலை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்றும், அனைத்து வில்லை அனுமதித்தொகை அணுகலையும் தொடர்ந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். வில்லை அணுகலைத் திரும்பப் பெறுவது ஒருபோதும் நிதி இழப்பை ஏற்படுத்தாது, குறிப்பாக மேலே பட்டியலிடப்பட்டுள்ள கருவிகளை நீங்கள் பயன்படுத்தினால்.அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வில்லை அணுகலைத் திரும்பப் பெறுவது பங்குவைத்தல், பூலிங், கடனளிப்பு போன்றவற்றையும் நிறுத்துமா?
இல்லை, இது உங்களின் எந்த உத்திகளையும் பாதிக்காது. நீங்கள் உங்கள் நிலைகளில் இருப்பீர்கள் மற்றும் தொடர்ந்து வெகுமதிகள் போன்றவற்றைப் பெறுவீர்கள்.
ஒரு திட்டத்திலிருந்து பணப்பையைத் துண்டிப்பதும், எனது நிதியைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை அகற்றுவதும் ஒன்றா?
இல்லை, நீங்கள் திட்டத்திலிருந்து உங்கள் பணப்பையைத் துண்டித்தாலும், வில்லை அனுமதித்தொகை அனுமதிகளை வழங்கியிருந்தால், அவர்கள் அந்த வில்லைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அந்த அணுகலை நீங்கள் திரும்பப் பெற வேண்டும்.
ஒப்பந்த அனுமதி எப்போது காலாவதியாகும்?
ஒப்பந்த அனுமதிகளுக்கு காலாவதி தேதிகள் இல்லை. நீங்கள் ஒப்பந்த அனுமதிகளை வழங்கினால், அவை வழங்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகும் பயன்படுத்தப்படலாம்.
திட்டங்கள் ஏன் வரம்பற்ற வில்லை அனுமதித்தொகையை அமைக்கின்றன?
தேவைப்படும் கோரிக்கைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகத் திட்டங்கள் பெரும்பாலும் இதைச் செய்கின்றன, அதாவது பயனர் ஒருமுறை மட்டுமே ஒப்புதல் அளித்து பரிவர்த்தனை கட்டணத்தை ஒருமுறை மட்டுமே செலுத்த வேண்டும். இது வசதியாக இருந்தாலும், காலத்தால் நிரூபிக்கப்படாத அல்லது தணிக்கை செய்யப்படாத தளங்களில் பயனர்கள் கவனக்குறைவாக ஒப்புதல் அளிப்பது ஆபத்தானது. உங்கள் ஆபத்தைக் கட்டுப்படுத்த, ஒப்புதல் அளிக்கப்படும் வில்லைகளின் அளவை கைமுறையாகக் கட்டுப்படுத்த சில பணப்பைகள் உங்களை அனுமதிக்கின்றன. மேலும் தகவலுக்கு உங்கள் பணப்பை வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.