உங்களுக்குப் பிடித்த வில்லைகள் அனைத்தையும் பட்டியலிடும் ஒரு பரிமாற்றகத்தைத் தேடித் தேடி சோர்வடைந்துவிட்டீர்களா? பயன்படுத்தி நீங்கள் பெரும்பாலான வில்லைகளைப் பரிமாற்றம் செய்யலாம்.
ஒரு வில்லைப் பரிமாற்றம் என்பது எத்திரியம் பிணையத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு சொத்துக்களைப் பரிமாறிக்கொள்வதை உள்ளடக்கியது, எடுத்துக்காட்டாக ETH-ஐ DAI-க்கு (ஒரு வில்லை) பரிமாற்றம் செய்வது. இந்தச் செயல்முறை மிகவும் வேகமானது மற்றும் மலிவானது. வில்லைகளைப் பரிமாற்றம் செய்ய உங்களிடம் ஒரு கிரிப்டோ பணப்பை இருக்க வேண்டும்.
முன்தேவைகள்:
- ஒரு வைத்திருக்க வேண்டும்; உங்களிடம் இல்லையென்றால், எத்திரியம் கணக்கை உருவாக்குவது எப்படி என்பது குறித்த இந்த வழிகாட்டியைப் பின்பற்றலாம்
- உங்கள் பணப்பையில் நிதியைச் சேர்க்கவும்
1. நீங்கள் விரும்பும் பரவலாக்கப்பட்ட பரிமாற்றகத்துடன் (DEX) உங்கள் பணப்பையை இணைக்கவும்
சில பிரபலமான பரிமாற்றகங்கள்:
- யூனிஸ்வாப் (opens in a new tab)
- Sushiswap (opens in a new tab)
- 1Inch (opens in a new tab)
- Curve (opens in a new tab)
சுவாரஸ்யமாக உள்ளதா? பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) என்றால் என்ன மற்றும் இந்த புதிய வகையான பரிமாற்றகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிக.
2. நீங்கள் பரிமாற்றம் செய்ய விரும்பும் வில்லைகளின் ஜோடியைத் தேர்ந்தெடுக்கவும்
எடுத்துக்காட்டாக, ETH மற்றும் DAI. இரண்டு வில்லைகளில் ஒன்றிலாவது உங்களிடம் நிதி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்பும் வில்லைகளின் அளவை உள்ளிட்டு பரிமாற்றம் என்பதை கிளிக் செய்யவும்
நீங்கள் எத்தனை வில்லைகளைப் பெறுவீர்கள் என்பதைப் பரிமாற்றகம் தானாகவே கணக்கிடும்.
4. பரிவர்த்தனையை உறுதிப்படுத்தவும்
பரிவர்த்தனையின் விவரங்களை மதிப்பாய்வு செய்யவும். தேவையற்ற ஆச்சரியங்களைத் தவிர்க்க பரிமாற்ற வீதம் மற்றும் பிற கட்டணங்களைச் சரிபார்க்கவும்.
5. பரிவர்த்தனை செயலாக்கப்படும் வரை காத்திருக்கவும்
எந்தவொரு தொகுதிச்சங்கிலி எக்ஸ்ப்ளோரரிலும் பரிவர்த்தனையின் முன்னேற்றத்தை நீங்கள் காணலாம். இந்தச் செயல்முறை 10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
பரிவர்த்தனை செயலாக்கப்பட்டவுடன், பரிமாற்றம் செய்யப்பட்ட வில்லைகளை உங்கள் பணப்பையில் தானாகவே பெறுவீர்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எனது பணப்பையிலிருந்து ETH-ஐ BTC-க்கு பரிமாற்றம் செய்ய முடியுமா?
இல்லை, ETH, ERC-20 வில்லைகள் அல்லது NFTகள் போன்ற எத்திரியம் பிணையத்திற்குச் சொந்தமான வில்லைகளை மட்டுமே நீங்கள் பரிமாற்றம் செய்ய முடியும். எத்திரியத்தில் உள்ள பிட்காயினின் "சுற்றப்பட்ட" (wrapped) வடிவங்களை மட்டுமே நீங்கள் பரிமாற்றம் செய்ய முடியும்.
விலை நழுவல் என்றால் என்ன?
இது நீங்கள் எதிர்பார்த்த பரிமாற்ற வீதத்திற்கும் உண்மையான வீதத்திற்கும் உள்ள வித்தியாசமாகும்.

