ஈதர் (ETH) என்பது எத்திரியத்தின் முக்கிய நாணயமாகும். இது பங்குவைத்தல், நாணயமாகப் பயன்படுத்துதல் மற்றும் கணக்கீட்டிற்கான எரிவாயு கட்டணங்களைச் செலுத்துதல் போன்ற பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. WETH என்பது பல பயன்பாடுகள் மற்றும் தேவையான சில கூடுதல் செயல்பாடுகளைக் கொண்ட ETH-இன் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும், இவை எத்திரியத்தில் உள்ள பிற வகையான டிஜிட்டல் சொத்துகளாகும். இந்த வில்லைகளுடன் வேலை செய்ய, ETH அவை பின்பற்றும் அதே விதிகளைப் பின்பற்ற வேண்டும், இது ERC-20 தரநிலை என அழைக்கப்படுகிறது.
இந்த இடைவெளியைக் குறைக்க, பொதியப்பட்ட ETH (WETH) உருவாக்கப்பட்டது. பொதியப்பட்ட ETH என்பது ஒரு திறன் ஒப்பந்தமாகும், இது எந்தவொரு அளவிலான ETH-ஐயும் ஒப்பந்தத்தில் வைப்பிலிடவும், ERC-20 வில்லை தரநிலைக்கு இணங்கும் அதே அளவிலான அச்சிடப்பட்ட WETH-ஐப் பெறவும் உங்களை அனுமதிக்கிறது. WETH என்பது ETH-இன் ஒரு பிரதிநிதித்துவமாகும், இது சொந்த சொத்தான ETH-ஆக அல்லாமல், ERC-20 வில்லையாக அதனுடன் தொடர்பு கொள்ள உங்களை அனுமதிக்கிறது. எரிவாயு கட்டணங்களைச் செலுத்த உங்களுக்கு இன்னும் சொந்த ETH தேவைப்படும், எனவே வைப்பிலிடும்போது சிறிதளவு சேமித்து வைப்பதை உறுதிசெய்யவும்.
WETH திறன் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி நீங்கள் ETH-க்காக WETH-ஐப் பொதியவிழ்க்க முடியும். WETH திறன் ஒப்பந்தத்தின் மூலம் நீங்கள் எந்தவொரு அளவிலான WETH-ஐயும் மீட்கலாம், மேலும் அதே அளவை நீங்கள் ETH-ஆகப் பெறுவீர்கள். வைப்பிலிடப்பட்ட WETH பின்னர் எரிக்கப்பட்டு, WETH-இன் புழக்கத்தில் உள்ள விநியோகத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது.
புழக்கத்தில் உள்ள ETH விநியோகத்தில் தோராயமாக ~3% WETH வில்லை ஒப்பந்தத்தில் பூட்டப்பட்டுள்ளது, இது மிகவும் பயன்படுத்தப்படும் ஒன்றாக அமைகிறது. பரவலாக்கப்பட்ட நிதி (DeFi) பயன்பாடுகளுடன் தொடர்பு கொள்ளும் பயனர்களுக்கு WETH குறிப்பாக முக்கியமானது.
ETH-ஐ ERC-20 ஆக நாம் ஏன் பொதிய வேண்டும்?
ERC-20 பரிமாற்றத்தக்க வில்லைகளுக்கான நிலையான இடைமுகத்தை வரையறுக்கிறது, எனவே எத்திரியத்தின் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தத் தரநிலையைப் பயன்படுத்தும் பயன்பாடுகள் மற்றும் வில்லைகளுடன் தடையின்றி தொடர்பு கொள்ளும் வில்லைகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ETH ஆனது ERC-20 தரநிலைக்கு முந்தையது என்பதால், ETH இந்த விவரக்குறிப்புக்கு இணங்கவில்லை. இதன் பொருள் உங்களால் எளிதாக ETH-ஐ பிற ERC-20 வில்லைகளுக்கு மாற்றவோ அல்லது ERC-20 தரநிலையைப் பயன்படுத்தும் பயன்பாடுகளில் ETH-ஐப் பயன்படுத்தவோ முடியாது. ETH-ஐப் பொதிவது பின்வருவனவற்றைச் செய்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது:
-
ERC-20 வில்லைகளுக்கு ETH-ஐப் பரிமாற்றம் செய்தல்: நீங்கள் ETH-ஐ நேரடியாக பிற ERC-20 வில்லைகளுக்குப் பரிமாற்றம் செய்ய முடியாது. WETH என்பது ERC-20 பரிமாற்றத்தக்க வில்லை தரநிலைக்கு இணங்கும் ஈதரின் பிரதிநிதித்துவமாகும், மேலும் இது பிற ERC-20 வில்லைகளுடன் பரிமாற்றம் செய்யப்படலாம்.
-
பரவலாக்கப்பட்ட செயலிகளில் (dapps) ETH-ஐப் பயன்படுத்துதல்: ETH ஆனது ERC20-இணக்கமானது அல்ல என்பதால், உருவாக்குநர்கள் பரவலாக்கப்பட்ட செயலிகளில் தனித்தனி இடைமுகங்களை (ஒன்று ETH-க்கும் மற்றொன்று ERC-20 வில்லைகளுக்கும்) உருவாக்க வேண்டும். ETH-ஐப் பொதிவது இந்தத் தடையை நீக்குகிறது மற்றும் உருவாக்குநர்கள் ETH மற்றும் பிற வில்லைகளை ஒரே பரவலாக்கப்பட்ட செயலிக்குள் கையாள உதவுகிறது. பல பரவலாக்கப்பட்ட நிதி பயன்பாடுகள் இந்தத் தரநிலையைப் பயன்படுத்துகின்றன, மேலும் இந்த வில்லைகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சந்தைகளை உருவாக்குகின்றன.
பொதியப்பட்ட ஈதர் (WETH) மற்றும் ஈதர் (ETH): என்ன வித்தியாசம்?
| ஈதர் (ETH) | பொதியப்பட்ட ஈதர் (WETH) | |
|---|---|---|
| விநியோகம் | ETH-இன் விநியோகம் எத்திரியம் நெறிமுறையால் நிர்வகிக்கப்படுகிறது. பரிவர்த்தனைகளைச் செயலாக்கும்போதும் தொகுதிகளை உருவாக்கும்போதும் ETH-இன் வெளியீடு எத்திரியம் மதிப்பீட்டாளர்களால் கையாளப்படுகிறது. | WETH என்பது ஒரு ERC-20 வில்லையாகும், இதன் விநியோகம் ஒரு திறன் ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பயனர்களிடமிருந்து ETH வைப்புகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தத்தால் WETH-இன் புதிய அலகுகள் வெளியிடப்படுகின்றன, அல்லது ஒரு பயனர் ETH-க்காக WETH-ஐ மீட்க விரும்பும்போது WETH-இன் அலகுகள் எரிக்கப்படுகின்றன. |
| உரிமை | உங்கள் கணக்கு இருப்பின் மூலம் எத்திரியம் நெறிமுறையால் உரிமை நிர்வகிக்கப்படுகிறது. | WETH-இன் உரிமை WETH வில்லை திறன் ஒப்பந்தத்தால் நிர்வகிக்கப்படுகிறது, இது எத்திரியம் நெறிமுறையால் பாதுகாக்கப்படுகிறது. |
| எரிவாயு | எத்திரியம் பிணையத்தில் கணக்கீட்டிற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டண அலகு ஈதர் (ETH) ஆகும். எரிவாயு கட்டணங்கள் Gwei-இல் (ஈதரின் ஒரு அலகு) குறிப்பிடப்படுகின்றன. | WETH வில்லைகள் மூலம் எரிவாயு செலுத்துவது இயல்பாக ஆதரிக்கப்படுவதில்லை. |