முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

பங்களிப்பாளர் அங்கீகாரங்கள்

மொழிபெயர்ப்புத் திட்டம் ஒரு கூட்டு முயற்சியாகும், மேலும் ஆயிரக்கணக்கான பங்களிப்பாளர்கள் தங்கள் நேரத்தை தன்னார்வமாக வழங்கி, இணையதளத்தை முடிந்தவரை பல மொழிகளில் அணுகக்கூடியதாக மாற்ற எங்களுக்கு உதவியுள்ளனர்.

இந்தப் பக்கம் எங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கும், எங்களின் மிகச் சிறந்த பங்களிப்பாளர்களை முன்னிலைப்படுத்துவதற்கும், அவர்களின் தொழில்முறை பயணங்களில் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Crowdin இல் எங்கள் திட்டத்தில் செயலில் உள்ள அனைத்து மொழிபெயர்ப்பாளர்களும் எங்கள் பங்களிப்பாளர்கள் பக்கத்தில் இடம்பெற்றுள்ளனர். அனைத்து ethereum.org மொழிபெயர்ப்பாளர்களையும் காண்க.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்புத் தரவரிசைப் பட்டியலிலும் தங்கள் இடத்தைப் பெறுவார்கள்.

மொழிபெயர்ப்புத் தரவரிசைப் பட்டியல்

#
மொழிபெயர்ப்பாளர்
மொத்த வார்த்தைகள்
SatglowHungarian
20990
Feek131Chinese Traditional
12287
airwandVietnamese
10141
4
Kuu_Filipino
9986
5
OmegaaaVietnamese
9968
6
Velcro_RURussian
9959
7
Herbie_23Italian
8984
8
mr_giorgosGreek
8435
9
olumhensebenYoruba
6718
10
HiroyukiNaitoJapanese
6180

சமீபத்திய செயல்பாட்டின் அடிப்படையில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களைக் காண்பிக்கவும், எங்களின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய எக்காலத்திற்குமான பங்களிப்பாளர்களை முன்னிலைப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். எங்கள் தரவரிசைப் பட்டியல் மாதாந்திர, காலாண்டு மற்றும் எக்காலத்திற்குமான பார்வையைப் பயன்படுத்தி மிகவும் சுறுசுறுப்பான மொழிபெயர்ப்பாளர்களின் தரவைக் கண்காணிக்கிறது, மேலும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதுப்பிக்கப்படும். மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களின் ''வெற்றிபெறும்'' வார்த்தைகளின் (மதிப்பாய்வின் போது அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தைகளின் எண்ணிக்கை) அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் வைக்கப்படுகிறார்கள்.

எங்கள் மொழிபெயர்ப்பாளர்கள்

சமூகமே ethereum.org மொழிபெயர்ப்புத் திட்டத்தின் மையமாக உள்ளது. கீழே உள்ள எங்கள் முழு மொழிபெயர்ப்பாளர் சமூகத்தையும் ஆராயுங்கள்.

அனைத்து மொழிபெயர்ப்பாளர்களையும் காண்க

எத்திரியம் உள்ளடக்கத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய தங்கள் நேரத்தையும் திறமையையும் அர்ப்பணிக்கும் எங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

சான்றிதழ்

எங்கள் மொழிபெயர்ப்பாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களின் தொழில் பாதைகளில் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். இதை மனதில் கொண்டு, ethereum.org மொழிபெயர்ப்பாளர் சான்றிதழை வடிவமைத்துள்ளோம்.

இந்தச் சான்றிதழானது, தொழில்முறை மற்றும் வரவிருக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் இதைக் குறிப்புக்காகப் பயன்படுத்தவும், தொழில்நுட்ப உள்ளடக்கத்தை மொழிபெயர்ப்பதில் தங்கள் நிபுணத்துவத்தை நிரூபிக்கவும் அல்லது எத்திரியம் மீதான தங்கள் அர்ப்பணிப்பைக் காட்டவும் விரும்பும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மொழிபெயர்ப்புத் திட்டத்திற்குப் பங்களித்திருந்தால் மற்றும் நீங்கள் மொழிபெயர்த்த வார்த்தைகளில் குறைந்தது 5,000 அங்கீகரிக்கப்பட்டிருந்தால், translations@ethereum.org என்ற முகவரிக்கு எழுதுவதன் மூலம் உங்கள் மொழிபெயர்ப்பாளர் சான்றிதழைக் கோரலாம். உங்கள் செய்தியில் உங்கள் Crowdin கணக்குக்கான இணைப்பு மற்றும் உங்கள் முழுப் பெயர் (அல்லது நீங்கள் விரும்பினால் புனைபெயர்) இருக்க வேண்டும், அதை நாங்கள் சான்றிதழில் சேர்ப்போம்.

translator certificate

OATs

மொழிபெயர்ப்புத் திட்டத்தில் பங்களிப்பவர்கள் வெவ்வேறு OATs (சங்கிலிசார் சாதனை டோக்கன்கள்) பெறத் தகுதியுடையவர்கள் – இவை ethereum.org மொழிபெயர்ப்புத் திட்டத்தில் அவர்களின் பங்கேற்பை நிரூபிக்கும் பூஞ்சையற்ற டோக்கன்கள் (non-fungible tokens) ஆகும்.

மொழிபெயர்ப்பாளர்களின் செயல்பாட்டின் அடிப்படையில், அவர்களுக்குப் பல வகையான OATs எங்களிடம் உள்ளன.

Crowdin இல் மொழிபெயர்ப்பு முயற்சிக்கு நீங்கள் பங்களித்திருந்தால், உங்களுக்காக ஒரு OAT காத்திருக்கிறது!

உரிமைக்கோருவது எப்படி

  1. எங்கள் டிஸ்கார்ட் சேவையகத்தில் இணையுங்கள் (opens in a new tab)
  2. #🥇 | proof-of-contribution சேனலில் உங்கள் Crowdin கணக்கின் இணைப்பை ஒட்டவும்.
  3. உங்கள் OATs ஐ உரிமைக்கோரத் தேவையான பாத்திரங்களை எங்கள் குழுவின் உறுப்பினர் உங்களுக்கு வழங்கும் வரை காத்திருக்கவும்.
  4. உங்கள் OATs ஐ உரிமைக்கோருங்கள்!

OATs ஐ உரிமைக்கோர நீங்கள் சுய-பாதுகாப்பு வாலெட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பரிமாற்றக் கணக்குகள் அல்லது தனிப்பட்ட திறவுகோல்கள் உங்களிடம் இல்லாத பிற கணக்குகளைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இவை உங்கள் OATs ஐ அணுகவும் நிர்வகிக்கவும் உங்களை அனுமதிக்காது.